2018ல் யாழ்ப்பாணத்தின் நிலை இதோ!! வயதுக்கு வந்த புத்திசாலிகள் மட்டும் வாசிக்கவும் Share

2018ல் யாழ்ப்பாணத்தின் நிலை இதோ!! வயதுக்கு வந்த புத்திசாலிகள் மட்டும் வாசிக்கவும்

 யாழ்ப்பாணம் பலாலி வீதி ஊடாக பைக்கில் பயணித்துக்கொண்டிருந்த ராஜு அங்கு புதிதாக திறக்கப்பட்டிருந்த கட்டடத்தை கண்டு திரும்பி பார்க்கிறான்.

ஓ.. அது கட்டடம் அல்ல கோவில்.

இங்கும் ஓர் புதிய கோவில் உருவாகியிருக்கிறதோ? போன மாதம் இதே போல பருத்தி துறை வீதியிலும் ஓர் அழகான கோவில் புதிதாக திறந்திருந்தார்கள்.

ராஜு வழமையாக இந்த வழியாக வேலைக்கு போய்வருபவன்.
போன மாதம் வரை இந்த இடத்தில் ஒரு உணவகம் இருந்தது.

மிகச்சாதாரணமான அந்த உணவகத்துக்கருகில் புதிதாக ஓர் உணவகம் வந்ததிலிருந்து இந்த கடை வாடிக்கையாளர்களை இழந்திருந்தது.
புதிய கடையில் அற்புதமான சுவையில் மாட்டிறைச்சி கொத்து போடுவார்கள்.

அந்த வழியால் போகும்போதே அஜினமோட்டோ மசாலா வாசனை ச்சும்மா சுண்டி இழுக்கும்.

அது தவிர இனிப்பு பண்டங்களும், சாக்லேட்களும் அங்கு அமோகமாக விற்பனையாகும்.

குழுக்களாக தமக்குள் காரணமேயில்லாமல் கெக்கே பிக்கே என்று சிரித்தபடி வரும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஏன் கிலோ கணக்கில் வாங்கி செல்வார்கள்.

பழைய கடைக்காரன் பணத்துக்காக இடத்தை விற்றுவிட்டான் போலிருக்கிறது.

வீதிகளில் பலவர்ண நிறக்கொடிகள் படபடத்துக்கொண்டிருந்தன.

பின்னால் இராணுவ கென்வே வாகன அணி வந்துகொண்டிருந்தது.

பவள் கவச வாகனம், பல் குழல் பொருத்திய ட்ரக் என வந்த வரிசையில் செய்ன்ப்ளக் ஒன்றின் மூடியை திறந்து கண்ணாடி அணிந்த ஒருவர் வீதியில் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கை காட்டியபடி வந்தார்.

செய்ன்ப்ளக்கின் பீரங்கி குழலில் வீடு படம் போட்ட கொடி கட்டப்பட்டிருந்தது.

சிறுவயதில் எங்கோ படித்த பிரச்சார பீரங்கி என்ற சொல்லுக்கு பல தமிழாசிரியர்களிடம் அர்த்தம் கேட்டும் விடை கிடைக்காதவன் இப்போது அதை நேரிலேயே பார்த்துவிட்டான்.

ஓ அடுத்த தேர்தல் நெருங்கி கொண்டிருந்தது ராஜுவுக்கு நினைவுக்கு வந்தது.

இப்போது தான் பள்ளி படிப்பை முடித்த அவனுக்கு இந்த வருடமே முதலாவது வாக்காளர் அட்டை வந்திருக்கிறது.

யாருக்கு வாக்களிப்பது என இதுவரை எதயும் யோசித்திருக்காத அவன் இந்த கட்சி அரசியல்வாதியை கண்டதும் இவருக்கே வாக்களிப்பதென முடிவு செய்தான்.

பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் போர் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாதிகளின் தலைவர் இவர்களை தமிழர்களின் அரசியல் தெரிவாக அறிவித்தாராம்.

அப்போது ராஜு பிறந்திருக்க கூட இல்லை.

அந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் கிணற்று நீரை குடிக்கும் காட்டுமிராண்டி பழக்கம் மக்களிடம் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறான். இப்போது யாரும் அந்த உயிராபத்து மிக்க காரியத்தை செய்வதில்லை.

தண்ணீர் விலை பெற்றோல் விலையை தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த காலத்தில்
வீடு படம் பொறித்த தண்ணீர் போத்தல்களை அங்கு நின்றவர்களுக்கு இலவசமாக கொடுத்துக்கொண்டு போனார்கள்.

மனிதநேயமிக்க அரசியல் வாதிகள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் தண்ணீர் விலை குறையும் என கணித்துக்கொண்டான்.

தேர்தல் நேரத்திலாவது மக்களை நேரில் பார்க்கும் இந்த தலைவரின் எளிமை அவனுக்கு பிடித்துப்போனது.

அருகில் நின்ற பாமர மக்களை கூட துப்பாக்கி முனையில் பிடித்து தள்ளாமல் மென்வலுவை பிரயோகித்து உடற்சோதனை செய்யுமாறு காவலர்களை அவர் பணித்ததை கண்டதும் அவர் இரக்ககுணம் கண்டு அவன் கண்கள் பனித்தன.

கட்சி தலைவர் எப்போதும் பேச்சு மாறாதவர் ஒரு வருடத்துக்குள் தீர்வு என்பார்.

எத்தனை யுகங்களானாலும் அவர் அதையே தான் சொல்கிறார். இந்த மாறாத கொள்கைப்பற்று அவனுக்கு பிடித்திருந்தது.

போன வார தமிழ்த்தேசிய பத்திரிகையில் கூட இதே தலைப்பு செய்தியையும் இவரது ஆவேசமான முகபாவமும் கொண்ட படத்தையும் பார்த்திருந்தான்.

ஆனால் இப்போது அமைதியான ஆமைஞானி போல சாந்தசொரூபியாக கோதுமை நிறத்தில் இருந்த அவர் மக்களுக்கு ஆனந்தமாக கை காட்டி கொண்டிருந்தார்.

அவரது வாகனத்திலிருந்த பேச்சாளர் ஒலிபெருக்கியில் எமது நிலங்களிலிருந்து இராணுவத்தை விரட்டியடிப்போம் என எழுற்சிகரமாக பேசிக்கொண்டு போனார்.

இதைக்கேட்டு அவனுள் இருந்த தேசப்பற்று வீறிட்டெழுந்து அந்தக்கணமே அவருக்கு ஓட்டு குத்த வேண்டும் என பரபரத்தது.

ஐந்தே நிமிடத்தில் அரசியல் தெளிவு பெற்றவனாக அலுவலகம் புறப்பட்டான்.....

அழகான பெண்கள் வெள்ளை உடையில் கைகளில் தாமரைப்பூ ஏந்தியபடி அந்த வெள்ளை கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்தார்கள்.

அவர்களில் பலர் பல்கலைகழக ஹொஸ்டல் மாணவிகளாக இருக்க கூடும்.
ஏனயவர்கள் பணிநிமிர்த்தம் இங்கு தங்கியிருக்கும் இராணுவ வீரர்களின் குடும்பத்தினராயிருக்கலாம் அவர்கள் இங்கு வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு வீட்டை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் அதில் வெளிநாடு செல்வதை இப்போது பலர் வழக்கமாக்கி கொண்டுள்னர்.

அழகை ரசிக்க அவகாசமின்றி அலுவலகத்துக்கு தாமதமாகி விட்டிருந்தமையால் அக்ஸிலேட்டரை முறுக்கினான்.

அதே நேரம் ஒரு ட்ரபிக் பொலிஸ் இவனை பைக்கில் துரத்தி வந்து வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்யவே

அழகை ரசித்ததால் அரஸ்ட் பண்ணுவாங்களோ என சிந்தித்தவன்

ஒரு வேள ஓவர்ஸ்பீடா இருக்குமோ? என படபடத்தபடி பைக்கை ஓரங்கட்ட அந்த பொலிஸ் காரர் வீதியிலுள்ள எல்லா வாகனங்களையும் ஓரமாக நிறுத்துவதை கண்டு சமாதானமானான்.

 

நன்றி
முகப்புத்தகம்!

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..