இத்தாலி பெண்ணுக்கு தமிழ் கலாசாரப்படி திருமணம்! Share

இத்தாலி பெண்ணை, தமிழ் கலாசாரப்படி, நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர், திருமணம் செய்துள்ளார்.

 

நாகர்கோவிலைச் சேர்ந்தவர், சுப்பிரமணி, இன்ஜினியர்; சீனாவில் வேலை பார்த்து வருகிறார். அங்கு, இத்தாலியைச் சேர்ந்த பிலாவியா ஜூலியா நெல்லி என்பவர் மேலாளராக பணியாற்றினார். இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இது தொடர்பாக, இரு வீட்டு பெற்றோருடன் பேசி, தமிழ் கலாசார முறைப்படி, நாகர்கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நேற்று நடைபெற்றது. மணமகன் பட்டு வேட்டி – சட்டையிலும், மணமகள் பட்டு புடவையிலும் இருந்தனர். தாலி கட்டி, திருமணம் நடந்தது.

இதுபற்றி மணமகள் பிலாவியா கூறுகையில், இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை போன்றவை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..