அம்மனுக்கு பஞ்சாபி உடுத்தி அழகு பார்த்த ஐயருக்கு நடந்த கதி இதோ!! Share

அம்மனுக்கு பஞ்சாபி உடுத்தி அலங்காரம் செய்து பூசை நடத்திய பூசகர் ஒருவர் ஆலயப் பணிகளில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய பூசகரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகைக்கு, தனி சந்நதி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் நடந்த பூசை நேரத்தில், சந்தன அலங்காரத்தின் போது,
அம்மனுக்கு பஞ்சாபி போன்ற உடை அணிவிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை
பக்தர்கள் சிலர் அலைபேசியில் படம் எடுத்ததால், தற்போது அந்த ஒளிப்படம் வைரலாகி வருகிறது.

இதனிடையே, ஆலய கலாச்சாரத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அம்மனுக்கு பஞ்சாபி போன்ற
உடையுடன் அலங்காரம் செய்ததால் குறித்த பூசகர் திருவாவடுதுறை ஆதீனத்தால் பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..