காணாமல் போன இளம் பெண் நித்யானந்தா ஆசிரமத்தில் Share

தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் மனோஜ் மதுரை மாவட்டம், வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.4 மாதங்களாக இவர் வேலைக்கு செல்லவில்லை.

பெற்றோர் தேடியபோது அவர், அக்கா மகள் நிவேதாவுடன் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் ஆசிரமத்தில் இருந்து விடுவிக்க கோரி காந்தி தர்ணா போராட்டம் நடத்தினார்.

அப்போது மனோஜ் பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் இருப்பதாக நித்யானந்தா சீடர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை பொலீஸ் ஸ்டேஷனில் காந்தி புகார் அளித்தார். மேலும், பெரியகுளம் டிஎஸ்பி வினோஜியை சந்தித்தும் மனு கொடுத்தார்.

இதையடுத்து டாக்டர் மனோஜ், நிவேதாவை காணவில்லையென பெரியகுளம் வடகரை பொலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். கர்நாடக பொலீசாரிடமும் இதுதொடர்பாக தகவல் தெரிவித்திருந்தனர். அம்மாநில பொலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திலிருந்து, டாக்டர் மனோஜ் மற்றும் நிவேதாவை, பெரியகுளம் வடகரை பொலீசார் மீட்டு வந்தனர்.

இவர்களை பெரியகுளம் அருகிலுள்ள ஜெயமங்கலம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று காலை முதல் இருவரின் பெற்றோர் முன்னிலையில் பொலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரையும், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

முன்னதாக, புகாரில் நிவேதாவுக்கு 17 வயது என கூறப்பட்டிருந்தது. ஆனால், நிவேதாவுக்கு 19 வயது என பள்ளி சான்றிதழ் பொலீசார் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு, இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சொந்த விருப்பப்படியே முடிவு எடுக்கலாம் என நீதிபதி சுந்தரி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல் நிலையத்துக்கு இருவரையும் பொலீசார் கொண்டு சென்றனர். அங்கு வந்த பிடதி ஆசிரம வக்கீல், இருவரையும் ஆசிரமத்துக்கே மீண்டும் அனுப்பி வைக்கும்படி பொலீசாரிடம் தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..