நல்லுார் மாம்பழம் யாருக்கு!! வடக்கு முதலமைச்சரே முடிவு செய்வார்!! Share

நல்லுார் பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 05 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஈ.பி.டி.பி 04 ஆசனங்களை பெற்றுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் ஆதரவுடன் மாம்பழத்தின் சின்னத்தில் களமிறங்கிய சுயேச்சைக்குழு 02 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐ.தேக, சு.க, த.வி.கூ தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளன.

இதன்படி, ஆட்சியமைப்பதற்கு ஐங்கரநேசனின் சுயேச்சைக்குழுவின் ஆதரவு தேவையென்ற நிலையேற்பட்டதையடுத்து, முக்கிய இரு அணியினரும் ஐங்கரநேசனை அணுகியதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் வடக்கு முதலமைச்சரின் முடிவுக்காக மாம்பழம் காத்திருப்பதாகத் தெரியவருகின்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..