சிறிதரனின் மூக்குக்குள் தும்பை நுழைக்கும் சந்திரகுமார்!! Share

கிளிநொச்சியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள கருத்து இது

மக்களுக்கான வெற்றி என மாற்றத்தை விரும்பிய மக்கள் எமக்குப் பெரும் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். மக்களுடைய இந்த ஆதரவின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி,

 

மக்களுக்கான வெற்றி என மாற்றத்தை விரும்பிய மக்கள் எமக்குப் பெரும் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். மக்களுடைய இந்த ஆதரவின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேசசபைகளிலும் 19 உறுப்பினர்களுக்கான இடங்கள் கிடைத்துள்ளது. இதற்கான ஆதரவை வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மூன்று பிரதேச சபைகளிலும் வலுவான ஒரு எதிர்த்தரப்பாக நாமே செயற்படவுள்ளோம். எதிர்த்தரப்பு என்பதற்காக எல்லாவற்றுக்கும் எதிராகச் செயற்படாமல் மக்களினுடைய எதிர்பார்ப்புக்கு அமைய ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து சிறப்பான நிர்வாகம் ஒன்றை வழிப்படுத்துவதற்கு முயற்சிப்போம். ஆதரவளித்த மக்களுடைய எதிர்பார்ப்புக்களை எம்மால் இயன்றவரை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம்.
மிகக்குறுகிய காலத்தில் மக்களிடையே பேராதரவைப் பெற்றிருக்கின்றோம். இது எம்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் ஆகும். இந்த நம்பிக்கையைப் பாதுகாத்து மேலும் எமது பணிகளைத் தொடர்வோம். மக்களுடைய இந்த ஆதரவு எதிர்காலத்தில் மேலும் எம்மை சிறப்பாக மக்கள் பணியாற்றுவதற்கான ஊக்கத்தைத் தருகிறது. ஆனாலும் தமிழ்மக்களுடைய அரசியல் தலைவிதியை சரியான திசையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற தமது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிட்டாமல் போன மக்களின் ஆதங்கத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். எதிர்காலத்தில் நிச்சயமாக மக்களோடு இணைந்து மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்தையும், தமிழ்மக்களின் விடுதலையையும் சாத்தியப்படுத்துவோம்.

முருகேசு சந்திரகுமார்,
அமைப்பாளர்.
சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பு.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..