லண்டனில் பைத்தியம் ஆடுவதற்கு மகிந்த இல்லாததே காரணமாம்!! கோத்தபாய சொல்வது என்ன? Share

இன்று காலை அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரின் செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நாட்டில்  இல்லாமையே லண்டன் போன்ற சர்வதேச நாடுகளில் பைத்தியம் ஆடுவதற்கு காரணம்.

வலியுள்ள எந்த இலங்கையனுக்கும் அவ்வாறு செயற்படத் தூண்டும்.

என்மீதான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் தான் இடம்பெற்று வருகின்றன. இது வாயுடைந்தவர்களின் செயற்பாடு. அவன்கார்ட்டுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு எதுவும் இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும். எவ்வித குற்றங்களுமில்லாது 70 ஆவது பிரிவின் கீழ் ஊழல் மோசடி தொடர்பில் பொறுப்புக் கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அவன்கார்ட் என்பது என்னவென்று. ஆணைக்குழுவினருக்குக் கூடத் தெரியவில்லை நான் கடந்தகாலங்களில் என்ன செய்தேனென, நான் செய்தது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தியது வெளிநாட்டு தொடர்புளை ஏற்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..