காதலர் தினத்தை முன்னிட்டு நாளை பல்கலைக்கழகம் மூடல் Share

காதலர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் யாரும் வரக்கூடாது என்று லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இது  குறித்து  லக்னோ பல்கலைக்கழக  நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மணவர்கள் பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. எந்த சிறப்பு வகுப்பும் நடைபெறாது.

எனவே மற்ற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது.

மாணவர்களை அவர்களின் பெற்றோர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்கார்ந்திருந்தாலோ நடமாடினாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..