பங்காளிக்கட்சிகளின் ஒத்துழைப்புடன் யாழ் மாநகரசபையில் ஆனோல்ட் முதல்வராகின்றார்!! Share

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவை.1. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை வென்ற சபைகளில் தவிசாளர், உபதவிசாளர்களை நியமிப்பது. அதேபோல மற்ற கட்சிகள் அதிக ஆசனங்களை வென்ற சபைகளில் அவர்கள் நியமிக்கும் தவிசாளர்களிற்கு ஒத்துழைப்பது.

2.தென்னிலங்கை தேசிய கட்சிகள் எதனுடனும் உள்ளூராட்சிசபையில் கூட்டணி வைப்பதில்லை.

3.தமிழ் மக்களின் பிரச்சனைகள்முழுமையாக தீர்க்கப்படும்வரை எந்த அரசுடனும் இணைவதில்லை. அத்துடன்

வடக்கு அரசியல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு புதிய வாய்ப்புக்களை கொடுப்பதில்லையென்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பிக்கு இடையில் புதிய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை கைப்பற்றிய சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பி வெளியிலிருந்து ஆதரவு வழங்கவிருக்கிறது.

இதேவேளை, நேற்று நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில், ஈ.பி.டி.பியுடன் கூட்டு வைப்பதில்லையென பங்காளி கட்சிகளுடன் முடிவெடுத்தது தமிழரசுக்கட்சி. ஆனால், யாழ் மாநகரசபையில் ஆனல்ட்டை முதல்வராக்குவதற்கு மேற்படி இணக்கப்பாட்டை இரகசியமாக ஏற்படுத்தி கொண்டுள்ளது.

பங்காளிக்கட்சிகள் வழக்கம் போல, இந்த விடயத்தை அறிந்தும் மௌனமாக இருந்து விட்டார்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..