அசைக்க முடியாது என்றிருந்த தமிழரசுக் கட்சியினர் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்!! முதலமைச்சர் ? Share

கொள்கையில் நாம் அனைவரும் ஒற்றுமைப்படும் அவசியம் ஏற்பட்டுள்ளது – முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிக்கை


“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் சிக்கலான நிலமை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்க்
கட்சிகள் ஒன்றிணையவேண்டும். கொள்கையில் நாம் யாவரும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளது”

இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக நான் செயற்படவில்லை. அதனால் நீங்கள்
இப்படித்தான் செய்யவேண்டும் என்று எந்த ஆலோசனையையும் எந்த கட்சிக்கும் நான்
கூறவிரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சமய மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள்
வலியுறுத்திவரும் நிலையில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் அதே கருத்தை
வெளிப்படுத்தியுள்ளார்.

தமிரசுக் கட்சியினர் சிலர் இடையூறு

ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாக வடக்கு மாகாண சபையின்
நிர்வாகங்களைச் சரியானமுறையில் செய்யவிடாமல் தமிழ் அரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் பல
இடையூறுகளை ஏற்படுத்தி இருந்தனர். மேலும் எம் மக்களையும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட
மக்கள் பிரதிநிதிகளையும் அந்நியப்படுத்தி இருட்டறையில் தள்ளிவிட்டு தமது தனிப்பட்ட
விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எமது தீர்வு விடயத்தை ஒரு சிலரே தனியாகக் கையாண்டார்கள்.

 

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்
போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது
அவர்களுக்கு ஒரு வெறுப்பை அல்லது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது. அந்த
வகையிலே இந்தத் தேர்தல் முடிவுகளை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்? தமிழ் மக்களுக்காக
நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில் – நான் கொழும்பு சென்று வந்து வவுனியாவில் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால்
தேர்தல் முடிவுகள் பற்றிய முழு அறிவையும் இன்னமும் பெறவில்லை. இந்தத்தேர்தல் முடிவானது
பொதுவாகக் கூறுவதானால் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல கட்சிகளுக்கு வாக்குகள்
பிரிந்து சென்றுள்ளமையையும் ஒரு சில மன்றங்களைத் தவிர எந்த ஒரு கட்சியும் உள்ளுராட்சி
மன்றங்களில் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியாமல் இருப்பதையும் உணர்த்தி
நிற்கின்றது .

அதேவேளை, தமிழ் மக்கள் பொதுவாகத் தமது தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்து அதிருப்தி
உற்றிருக்கின்றார்கள் என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கின்றன. மாற்றம் ஒன்றை மக்கள்
விரும்பியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால்தான் சில கட்சிகளுக்கு
வீழ்ச்சியும் சில கட்சிகளுக்கு எழுச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.
காலாதிகாலமாக “வீடு” சின்னத்துக்கு வாக்களித்த பலர் தற்போதைய தலைமைத்துவத்தைப்
பிடிக்காததாலோ என்னவோ அவர்கள் இம் முறை யாழ்ப்பாண மாவட்டத் தேர்தலில் ஈடுபடவில்லை என்று தெரிகின்றது.

உதாரணமாக இந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் கிளிநொச்சியில் 74.82 சதவீதமும்
முல்லைத்தீவில் 77.49 சதவீதமும் மன்னாரில் 81.38 சதவீதமும் வவுனியாவில் 74.03
சதவீதமுமபகக இருக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் 70.84 சத விகிதத்தினரே வாக்களித்துள்ளார்கள்.
சில புள்ளி விவரங்கள் இன்னும் குறைத்தே யாழ்.மாவட்ட வாக்களிப்பைக் குறிப்பிடுகின்றன. அரச
புள்ளி விவரங்களின் படி தமிழ் அரசுக் கட்சி 2015ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குத் தொகை
5 இவட்சத்து 15 ஆயிரத்து 963. இம் முறை அந்தத் தொகை 3 இலட்சத்து 39 ஆயிரம் 675ஆக
குறைந்துள்ளது. 34 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

எமது உரிமைகளை, உரித்துக்களை தொடர்ச்சியாக ஆணித்தரமாக எமது புலம்பெயர் மக்களின்
பிரதிநிதிகளையும் முன்வைத்து அரசிடம் நீதியானவற்றை, நியாயமானவற்றைப் பெற்றுக் கொள்வதில்
எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் தெற்கில்
யார் வந்தாலும் எம்மவர் பயப்படத்தேவையிருந்திருக்காது.


 தெற்கு மாற்றத்தால் அச்சமடைய இதுவே காரணம்
  

சுயநலன் தரக்கூடிய வெளிநாட்டு உள்ளீடல்களால் மக்களுடன் கலந்தாலோசியாது பலவிட்டுக்
கொடுப்புக்களை இன்றைய ஆட்சிக்காக எமது தலைமைகள் ஏற்படுத்திக் கொடுத்தமை தெற்கில்
ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எம்மை மேலும் பலவீனப்படுத்தி இருக்கின்றதோ என்று சிந்திக்க
வைக்கின்றது.
சுயநலன் தரக்கூடிய வெளிநாட்டு உள்ளீடல்களால் மக்களுடன் கலந்தாலோசியாது பலவிட்டுக்
கொடுப்புக்களை இன்றைய ஆட்சிக்காக எமது தலைமைகள் ஏற்படுத்திக் கொடுத்தமை தெற்கில்
ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் எம்மை மேலும் பலவீனப்படுத்தி இருக்கின்றதோ என்று சிந்திக்க
வைக்கின்றது.

ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் காரணமாக வடக்கு மாகாண சபையின்
நிர்வாகங்களைச் சரியானமுறையில் செய்யவிடாமல் தமிழ் அரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் பல
இடையூறுகளை ஏற்படுத்தி இருந்தனர். மேலும் எம் மக்களையும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட
மக்கள் பிரதிநிதிகளையும் அந்நியப்படுத்தி இருட்டறையில் தள்ளிவிட்டு தமது தனிப்பட்ட
விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எமது தீர்வு விடயத்தை ஒரு சிலரே தனியாகக் கையாண்டார்கள்.

தமிழ் தலைமைகள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளனர்
    

உள்ளூராட்சித் தேர்தல் தமிழ் அரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி
கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது என்று கூறலாம். அசைக்கமுடியாது
என்றிருந்தவர்கள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள்!

முதலமைச்சரான எனக்கே என்ன நடைபெறுகிறது என்று தெரியாத நிலையில் மக்களின் நிலமை
என்னவாக இருந்திருக்கும் என்று பல சமயங்களில் நான் எண்ணிப்பார்த்ததுண்டு. இவை யாவும்
வெளிப்படைத் தன்மையற்ற நடைமுறைமையின் பிரதிபலிப்புக்களே. ஆகவே இந்த உள்ளூராட்சித்
தேர்தல் தமிழ் அரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய
ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது என்று கூறலாம். அசைக்கமுடியாது என்றிருந்தவர்கள்
நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள்!

இனியாவது ஓரிருவர் முடிவுகளை எடுக்கும் நிலை மாற்றப்பட்டு சகலரையும் பங்குதாரர்களாக
உள்வாங்கி ஆக்கபூர்வமான தீர்க்கதரிசனம் மிக்க செயற்பாடுகளை கட்சிவேறுபாடுகள் கடந்து
முன்னெடுத்து எமது மக்களுக்கான பணியை ஆற்ற நாம் யாவரும் ஒன்று கூட வேண்டும்.
அதேவேளை உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் சிக்கலான நிலமை ஏற்பட்டுள்ள நிலையில்
தமிழ்க் கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றிணையவேண்டும். இந்தத் தேர்தலில் எந்த ஒரு
கட்சிக்கும் ஆதரவாக நான் செயற்படவில்லை. அதனால் நீங்கள் இப்படித்தான் செய்யவேண்டும் என்று
எந்த ஆலோசனையையும் எந்த கட்சிக்கும் நான் கூறவிரும்பவில்லை. ஆனால் கொள்கையில் நாம்
யாவரும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொள்கையில் எம்மவர் ஒன்றிணைவார்களா?
சுயநலம் மேலோங்கும் போது கொள்கைகள் மீதான பற்று குறைந்துவரும்.

 

மனிதர்களாகிய நாங்கள் எப்பொழுதுமே இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து அமைதி கலையாமல்
இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். ஆனால் வாழ்க்கை அதற்கு இடங்கொடுப்பதில்லை.
நடைமுறையைக் குழப்ப நிகழ்வுகள் வந்த வண்ணமே இருக்கும்.

என் நண்பர் ஒருவர் 1983ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றது,
திறந்த பொருளாதாரக் கொள்கையை ஜே.ஆர் கொண்டுவந்தது முதல் வெளிநாட்டு முதலீடுகளை அரசு
உள்ளேற்கின்றது என்பது கண்டு இலங்கையில் முதலீடு செய்ய இங்கிலாந்தில் இருந்து ஜுன்
மாதமளவில் வந்து பலருடன் கலந்துறவாடி மகிழ்வுடன் இருந்தார். ஆனால் ஜுலை 23ஆம் திகதி
அவரை உள்ளூர் இடம்பெயர் மக்களின் முகாமுக்கு கூட்டிச் சென்று, பல இடர்பாடுகள் மத்தியிலே
திரும்பவும் இங்கிலாந்தைச் சென்றடைய வைத்தது. முன்மொழிவு மனிதனுடையது. பின்விளைவு
இறைவன் சித்தம்.

பதவிகளில் ஒட்டி நின்று மக்கள் நிலையறியாது இருந்தவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள்
அதிர்ச்சியைத் தந்துள்ளமை உண்மைதான். அதிர்ச்சியில் இருந்து விடுபட சில காலம் போகும்.
ஆனால் அவர்கள் யாவரும் தமது குறைபாட்டை முற்றாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனினும் தமது
குறைபாடுகளை எமது சிங்கள, தமிழ் அரசியல்த் தலைவர்கள் மீளாய்வு செய்ய இது தக்க தருணமாய்
அமைந்துள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமை அவசியம் என்பதை அடுத்தடுத்துக் கூறிவருகின்றேன்.
கட்சிகள் சுய நலத்துக்காக ஒன்றுபடுவன. ஆனால் தமிழ் மக்கள், கட்சிகளின் கட்டுப்பாடுகளுக்கு
அப்பாற் சென்று ஒரு இயக்கமாய் ஒருங்கிணைந்து தமது உரிமைகளைப் பெற அஹிம்சை வழியில்
போராட வேண்டும்.

தமிழ்த் தலைமைகள் கட்சிப் பாகுபாடு இன்றி கொள்கையால் ஒன்றுபட்டு அரசுக்கு எமது
கருத்துக்களையும் இடர்களையும் எடுத்துரைக்க வேண்டும். அரசியலமைப்பு மாற்றங்கள் எல்லோரின்
ஒத்துழைப்புடன் மீண்டும் தொடங்க வேண்டும். மாற்றங்கள் என்று கூறும் போது மாற்றத்துக்கான சூழல்
ஏற்படுத்தப்பட்டு வெளிப்படையாக அது பற்றிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு, முடிவெடுத்து
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தத் திட்டத் தயாரிப்பில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய நாடுகள் போன்றவற்றின்
பேராளர்களும் அதில் பங்குபற்ற வேண்டும். வெளிநாடுகள் வேண்டாம், புலம்பெயர்ந்தோர் வேண்டாம்
என்று கூறுவது பெரும்பான்மை அரசியல் வாதிகள் தமக்கிருக்கும் அதிகாரங்கள் குறைந்து
விடுமே என்ற ஆதங்கத்தால். அதனால்த்தான் எமது பிரச்சினை தீராது இதுவரையில் இழுபட்டுக்
கொண்டிருக்கின்றது.

வெளிநாட்டு அரச பிரதிநிதிகளும் புலம்பெயர் தமிழர்தம் பேராளர்களும் 1987ல் 13வது
திருத்தச்சட்டத்தை ஏற்படுத்திய இந்திய நாட்டின் பிரதிநிதிகளும் சேர்ந்திருந்து இலங்கையின்
இனப்பிரச்சனையை அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதே உசிதம். அவ்வாறான கருத்துப்
பரிமாற்றத்திற்கான நெருக்குதல்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.

எவ்வாறு எமக்கென ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டம் நாடு முழுவதற்கும்
ஏற்புடைத்தாக்கப்பட்டதோ அதேவாறு நாம் யாவரும் சேர்ந்து ஐக்கிய சோஷலிச சமஷ்டிக்
குடியரசொன்றை நிறுவ முன்வர வேண்டும்.

ஒன்பது மாகாணங்களும் சமஷ்டி அலகுகள் ஆக்கப்பட்டு எந்த இரு அல்லது அதற்கு மேற்பட்ட
மாகாணங்களும் ஒருவரோடு ஒருவர் இணைய இடமளிக்க வேண்டும். இவ்வாறான செயல் ஒவ்வொரு
மாகாணமுந் தனித்தனியாகவும் மற்றவர்களுடன் சேர்ந்தும் முன்னேற வழி வகுக்கும்.
தத்தமது தனித்துவத்தை மாகாணங்கள் ஒவ்வொன்றும் பேண வழி வகுக்கும். அதற்கு நாம் சமஷ்டி
சம்பந்தமான உண்மை நிலையை உலகறியச் செய்ய வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நான் ஆணித்தரமாகக் கூறவிரும்புவது, கொள்கை ரீதியில் ஒன்றுபடுங்கள்.
சில்லறை நலன்களை ஆட்சியாளர்களிடம் இருந்து பெற முனைந்தீர்களானால் நீங்கள் காலாகாலத்தில்
பெரும்பான்மையினரின் வலைக்குள் சிக்கி நாளடைவில் உங்கள் தனித்துவத்தை இழந்து விடுவீர்கள்.
அம்பலாங்கொடை, பலப்பிட்டிய, நீர்கொழும்பில் இருந்து கற்பிட்டி வரையான பிரதேசத்தில்;
தமிழர்களாக இருந்த எம் மக்கள் சிங்களவர்களாக மாறியதை மறந்துவிடாதீர்கள் – என்றுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..