‘ஜேசு சத்தியமாக நான் இல்லை!!‘- சிலுவையில் சத்தியம் பண்ணினார் சூ.சிறில்!! நடந்தது என்ன? Share

யாழ் மாநகரசபை மேஜராக தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த ஆனோல்ட்டும் பிரதி மேஜராக ரொலோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்புத்துறை வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட ஈசனும் தெரிவாகியுள்ளனர்.யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று இத் தெரிவு இடம்பெற்றுள்ளது. குறித்த தெரிவு இடம் பெற்ற போது சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு முன் யாழ் மாநகரசபைக்கு தெரிவாகிய சூ.சிறில் சத்தியம் ஒன்று செய்துள்ளார்.

அதாவது தான் சில வேட்பாளர்களை வைத்து ஆனோல்டுக்கு எதிராக செயற்படவில்லை என தனது கழுத்திலிருந்த சிலுவை மூலம் சத்தியம் செய்ததாக தமிழரசுக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..