மட்டக்களப்பு – திருமலைவீதியில் விபத்து! இளைஞர் ஒருவர் பலி! (Photos) Share

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குச் சமீபமாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் ஸ்தலத்திலேயே பலியானதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.


மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மீது அதிவேகமாகச் சென்ற டிப்பர் கனரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. மூதூர் பெரியபாலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான உம்முஹஸன் ஸப்ரி என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தினை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் டிப்பர் வாகனச் சாரதியைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர். சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Image may contain: one or more people and outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..