கொழும்பு ஆமர் வீதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது; இதுவரை 7 பேர் பலி!! (video) Share

கொழும்பு ஆமர் வீதி பிரதேசத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் கட்டிடம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

தற்போது சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளுக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கிரெண்ட்பாஸ், பபாபுள்ளே மாவத்தையில் சுலைமான் வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தற்போது அந்தப் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..