கள்ளச்சாராயத்தை தேடிச் சென்ற அதிகாரிகளுக்கு சிக்கிய ஆயுதங்கள் Share

தங்கொடுவ -யோஹியான - மொடுமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, சட்ட விரோதமான சில துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (13) இரவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மற்றும் ஓர் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோத மதுபானத்திற்கு மேலதிகமாக இரகசியமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..