பஸ்சில் ஆண் உறுப்பை மாணவி மீது பிரயோகித்த நபருக்கு மாணவி கொடுத்த தண்டனை!! (video) Share

பஸ்சில் ஆண் உறுப்பை மாணவி மீது பிரயோகித்த நபருக்கு மாணவி கொடுத்த தண்டனை!! (video)

30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த பேருந்து ஒன்றில், 19 வயது பாடசாலை மாணவி
ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து, பேருந்தில் நடந்த சம்பவத்தினை மாணவி, தான் பதிவு
செய்த காட்சியை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி பயணித்த பேருந்தில் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர்,  தனது பிறப்பு
உறுப்பை வெளியே எடுத்து, மாணவியை பாரத்து மிக மோசமாக நடந்துள்ளார்.

அந்த மாணவி குறித்த நபர் இவ்வாறு செயற்படுவதனை, இரகசியமான முறையில் வீடியோவில்
பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், மாணவி சக பயணிகளிடம் உதவியும் கோரியுள்ளார். ஆனால் யாரும் அதை கண்டு
கொள்ளவில்லை என தனது முறைப்பாட்டில் மாணவி தெரிவித்துள்ளார்.

 மோசமாக நடந்து கொண்டது மாத்திரமின்றி தன்னை மிரட்டியதாகவும் மாணவி முறைப்பாட்டில்
குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மாணவி இவ்வாறு பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மாணவி கூறியதாவது.....

”நான் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனது பக்கத்தில் ஒருவர் அமர்ந்தார்.
பேருந்தில் 30 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். சற்று நேரம் சென்றதும் அவரது பிறப்பு
உறுப்பை  என்னை நோக்கி வெளியே எடுத்தார்....  நீங்க என்ன பன்னிகிட்டு இருக்க  என
அவனிடம் கேட்டேன், என்னை அவர் மிரட்டினார்  மற்ற பயணிகளிடம் உதவி கேட்டேன் யாரும் இதை
கண்டு கொள்ளவில்லை வேடிக்கை மட்டுமே பார்த்தனர் அவர் இறங்குமிடம் வந்ததும் அவர் எதுவுமே
நடக்காதது போன்று இறங்கி சென்றார்.

வீட்டிற்கு வந்து எனது பெற்றொரிடம் கூறினேன் அவர்கள் அச்சப்பட்டார்கள். முதலில் முறைப்பாடு
செய்ய  வேண்டாம் என்றனர், பின்னர் நான் எனது டிவிட்டரில் அந்த காணொளியை வெளியிட்டேன், 3
நாள் கழித்து காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்தேன், அங்கு சென்றால்
" பேருந்தில் எப்படி எனக்கு ஒரு பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டதோ அதே நிலையை காவல்
நிலையத்தில் நான் உணர்ந்தேன். சம்பவம் நடந்த போது வராமல் 3 நாள் கழித்து ஏன் வந்துருக்க என
எனது முறைப்பாட்டை அவர்கள் வாங்கவில்லை. கிட்ட தட்ட 6 மணி நேரமாக நான் காவல்
நிலையத்தில் காக்க வைக்கப்பட்டேன்

பெண்கள் மனித உரிமை ஆணையர் தலையிட்டு  முறைப்பாட்டை பதிவு செய்தார்கள். கடந்த
வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் இது, இதுவரை குறித்த நபரை காவற்துறை கைதும் செய்யவில்லை
சக பயணிகளும் உதவிக்கு முன் வரவில்லை காவல் துறையும் அலட்சியம் காட்டியதால் பெண்கள்
எப்படி பாதுகாப்பாக இருப்பது” என வருத்தத்துடன் அநத மாணவி பேட்டி அளித்துள்ளார்.

மகள் வயதுடைய பெண்ணிடம் 30 பயணிகள் சூழ்ந்திருக்க எவரும் நினைத்துக் கூட பார்க்க
முடியாது அளவிற்கு வெறிபிடித்து நடந்த கொண்ட இவருக்கு கடுமமையான தண்டனை வழங்கப்பட
வேண்டும் அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை
எழுந்துள்ளது.

*”ஒரு நடிகை புகையிரதத்தில் தனக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்தார் என்றால், அது தலைப்பு
செய்தியாகி, அடுத்த அரை மணி நேரத்தில் அவ*ர் * கைது செய்யப்பாடுகிறார்.*

*ஆனால் மிகவும் மோசமாக இங்கு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளி கைது
செய்யப்படவில்லை. நடிகைகளுக்கு மட்டும் தான் கற்பு இருக்கின்றதா..? சாதாரண எங்களை போன்ற
பெண்ணின் கற்பிற்கு மதிப்பில்லையா..? நடிகையாக இருந்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களா ?
முக்கியத்துவம் கொடுப்பார்களா ?”* என பாதிக்கப்படும் பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் டெல்லி நகரில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்த காணொளி இணைப்பு...

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..