பசிக்கொடுமையால் வந்த மதுவின் உயிர் எடுத்த கதை (photos) Share

நண்பர்களே உங்களுக்கோர் வேண்டுகோள் இது இறந்து போன மதுவின் ஆத்மாவை அடக்க எழுதும் வரியல்ல அவனை கொன்று புதைத்தவர்களின் மதியை உலகிற்கு எடுத்துரைக்கும் வரிகள்

இன்னொரு மது இவ்வுலகில் இறக்க கூடாது என்பதற்கு மட்டுமல்ல
இனிமேல் பிறக்கவும் கூடாது என்பதற்கான வரிகள்
பசி எனக் கேட்டால்
பச்சை குழந்தை கூட தன் எச்சிப்பருக்கை எடுத்து கொடுத்திடுமடா நம் தேசத்தில்
பசியென வந்தவனுக்கு உணவளித்திட முடியாத பிச்சைகாரனெல்லாம்
அவன் அரிசியை களவாடி விட்டான் என அவன் கதை முடிக்க அடித்து துவைத்து அம்மணமாக்கி தெருவில் வைத்து அசிங்கப்படுத்திய அகோர காட்சியை கண்டேனடா
கேரளத்தில் நடந்த கேவலமடா இவையெல்லாம்
வாயில்லா பூச்சியை வதம் செய்து விட்டு
ஏதோ ஹிட்லரிடம் இருந்து உலகை காப்பாற்றியதாய் தங்களை உத்தமராய் காட்டி ராஜநடை போடும் நீங்கள் எல்லாம் பித்தர்கள் தானா
பசியால் அவன் பட்ட துன்பத்தை பார்க்கையில் நீங்கள் செய்த காரியம்
மரத்தில் இருந்து வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது போல் உள்ளதடா
கோமாளிக்கூட்டங்களே
கோடிக் கோடியாய் கொள்ளையடித்தவங்களுக்கு கும்பீடு போட்டவர்கள் தானே
அரக்கர் குலம் அழிந்தது என்று புராணத்தில் பேசியதெல்லாம் வெறும் பகட்டு தானே
இப்போது உங்கள் உருவில் பார்க்கிறேன் நானே
அரக்க வம்சம் இன்னும் அழியவில்லை என உரக்க கூறுவேன் உங்களை பார்த்து
விசமிகளே
இந்த பாவம் ஒரு போதும் உங்களை வாழ விடாது
தனி ஒருவன் உணவின்றி திருடுவது அவன் பிழை அல்ல
அரசாங்கத்தின் பிழை
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினையே அழிப்போம் என கோசமிட்டவர்கள் எங்கே
தனியொருவன் பசியால் உயிரை எடுத்த கொடுமையை கோசமிட வாருங்களன்

கவி.பிரியா நடேசன்

முடிந்தால் இதை அதிகம் பகிருவதன் மூலமோ அல்லது உங்கள் முகநூலில் பதிவேற்றுவதன் மூலமோ இணையபுரட்சி மூலம் இவருக்கான தீர்வை அவர் குடும்பத்திற்கான உதவிகளை மற்றும் இது போன்றவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க உதவ முடியும்
கவிஞர்கள் இதைபற்றி கட்டாயம் எழுதுங்கள்
சமூக பதிவாளர்கள் மீம்ஸ் கிரியேட்டர் இது தொடர்பில் எழுதுங்கள்.
இது விருப்புகளுக்காகவோ அல்லது கருத்துகளுக்காகவோ பதிவிடப்படவில்லை முடிந்தால் பகிரவும்
Image may contain: 2 people, people standing, outdoor and natureImage may contain: 1 person, outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..