பிரான்சில் 40 பெண்களை கற்பழித்த கொடூரன்: பொலிசில் சிக்கியது எப்படி தெரியுமா?..!! Share

பிரான்சில் ஆண்டுகளாக சுமார் 40 பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் தொல்லை அளித்ததாக நபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


பிரான்சின் Pont-sur-Sambre பகுதியில் கடந்த திங்களன்று கைது செய்யப்பட்ட 57 வயது நபர் தன்மீதான குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் பெல்ஜியம் எல்லையில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், வாகன பதிவு எண்ணை பயன்படுத்தி பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலாக சுமார் 40 பெண்களை சீரழித்தது வெச்சத்துக்கு வந்தது.

1996 ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், தற்போது அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தன்னால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களையும் ஒரே யுத்தியை பயன்படுத்தி வசப்படுத்தியுள்ளார்.

அதிகாலையில், சாலையில் தனியாக செல்லும் பெண்களை பிந்தொடர்ந்து சென்று பின்னால் இருந்து தாக்கி, தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார்.

மட்டுமின்றி முகமூடி அணிந்து, தலையில் தொப்பி வைத்தும் மறைத்துள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டு 33 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான 40 வயது நபருக்கு அடுத்து அதே போன்று தொடர் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கும் இரண்டாவது நபர் இது என்பது குறிப்பிடத்தக்கது

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..