வடமராட்சியில் அருந்தவச்செல்வன் காணாமல் போய்விட்டார்!! Share

வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை - குடந்தனை கிழக்குப பகுதியைச் சேர்ந்த செல்வராசா அருந்தவச்செல்வன் (29 வயது) என்ற நபர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவரது மனைவியான அருந்தவச்செல்வன் ரதி என்பவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 அடி அரை அங்குலம் உயரம். மாநிறம். பெரிய உடலமைப்பு என்பன அவரது அங்க அடையாளங்களாகும். இறுதியாக நீல நிறமான கட்டமிட்ட மேற்சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர் பற்றிய விபரங்களை அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..