பேஸ்புக் நிறுவனத்துக்கு இலங்கை விடுத்துள்ள எச்சரிக்கை இதுதான்..... Share

பேஸ்புக் நிறுவனத்துக்கு இலங்கை விடுத்துள்ள எச்சரிக்கை இதுதான்.....

பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை
வெளியிட்டிருக்கிறது. பேஸ்புக் மீதான தடை அரசியல் சார்ந்த விடயம் இல்லை.

ஆனாலும் இனவாதத்தை தூண்டும் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
வகையான பதிவுகளை தொடர்ந்து இடம்பெற அனுமதிக்க முடியாது.

இந்தவிடயத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

அந்த நிறுவனம் வழங்கும்  உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த தடையை நீக்குவதற்கான
நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..