எதிர்வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து இலங்கையில் பேஸ்புக்கைப் பார்வையிடலாமாம்!! Share

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.


நாளை மறுதினம் முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை முகநூல் மீதான தடை நீக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் எதிரொலியாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..