முல்லைத்தீவில் கடலுக்குச் சென்ற மீனவர்களைக் காணவில்ல!! நடந்தது என்ன? (Photos) Share

முல்லைத்தீவு கடலில் தொழிலுக்குச் சென்ற 3 மீனவர்களைக் காணவில்லை!

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் படகு ஒன்றில் நேற்றிரவு தொழிலுக்குச் சென்ற 3 மீனவர்களைக்
காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மன்னார் தொடக்கம் காலிவரையான கடற்பரப்பில் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர்
வேக்கத்தில் காற்று வீசுவதனால் மீனவர்களைக் கடலுக்குச் செல்லவேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது.

இதே வேளை கடந்த 9ம் திகதியும் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரைக் காணவில்லை எனத் தெரியவருகின்றது.

வெற்றிலைக்கேணியை பிறப்பிடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவதாஸ் யூலி அலெக்சன் கடந்த ஒன்பதாம் திகதி தொழிலுக்கு சென்று இன்றும் கரை திரும்பவில்லை

இவர் பயணம் செய்த படகு இஞ்சினோடு மாத்தளன் பகுதியில் கரையொதுங்கியிருக்கிறது

இன்றோடு மூன்றாவது நாள் கடலில் கண்ணீரோடு உறவுகள் கடும் தேடல்
ஆயினும் அது இன்றும் கைகூடவில்லை.

கடலில் இறந்தால் பெரும்பாலும் அவருடைய உடல் தண்ணீரில் மிதக்கும் அல்லது ஆக குறைந்தது ஒரு நாளில் அவருடைய உடல் எங்கையோர் திசையில் கண்டிப்பாக கரையொதுங்கும்

ஆனால் இன்றோடு மூன்றாவது நாள்  அவரது உடல் கரைக்கு வந்து சேரவில்லை.

பல மர்மங்கள் நீண்டு கொண்டே போகிறது.  அன்று இரவு பெரிய விசைபடகுகள் அருகில் இருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அறிய முடிகிறது

அவர் பயணித்த படகில் அவர் உடுத்திய உடுப்புக்கள் பத்திரமாக இருந்ததாக அறியமுடிகின்றது.

Image may contain: 1 person, ocean, outdoor, water and natureImage may contain: one or more people, people standing, ocean, sky, water, outdoor and nature

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..