உள்ளூராட்சிசபை உறுப்பினர்களை ஏமாற்றி, பத்திரிகை வெளியீட்டுக்கு அழைத்தது தமிழரசுக்கட்சி! Share

தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் நாளை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது.

இந்த நிகழ்வில் ஆட்களை சேர்ப்பதற்காக, தமிழரசுக்கட்சி புதியதொரு உத்தியை கையாள்கிறது. வடக்கு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவியேற்பு நாளை யாழ் இளங்கலைஞர் மண்டபத்தில் நடப்பதால், அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் (வேட்டி, நசனல் அணிந்தபடி) கலந்துகொள்ள வேண்டுமென அறிவித்தல் விடுத்துள்ளனர். பதவியேற்புவிழா என பிரதிநிதிகளை ஏமாற்றி, பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு நடக்கவுள்ளது.

பத்திரிகைக்கான மாதாந்த செலவு 21 இலட்சங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பணத்தின் ஒரு பகுதியை கட்சிக்கு ஆதரவான தொழிலதிபர்களிடம் பெற்றுக்கொள்வதென்றும், மிகுதியை கட்சியின் எம்.பி, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் புதிதாக கட்சியில் வேட்பாளராக களமிறங்க விரும்புபவர்களிடம் இருந்து அறவிட கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் முடிவாகியுள்ளது.

ஆகவே, புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு பண உதவி செய்வதன் மூலம், தமிழரசுக்கட்சி சார்பில் தேர்தலொன்றில் ஆசனம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..