மக்கள் மத்தியில் தலைக்காட்ட முடியவில்லை. – வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜா கவலை Share

மக்கள் மத்தியில் தலை காட்ட முடியாத நிலைமையில் நாங்கள் உள்ளோம் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு சென்ற போது மாகாண சபையால் என்ன செய்தீர்கள்
என மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றார்கள். மக்கள் மத்தியில் தலைகாட்ட முடியாத நிலையில்
உள்ளோம். வவுனியா பிரதேசங்களில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் அதிபர்கள் பற்றாக்குறைகள்
காணப்படுகின்றன அது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சருக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டியும்
எந்த நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு மாகாண சபை செயற்பாடுகள் நடைபெற்று வந்தால் நாம் எப்படி மக்கள் மத்தியில் செல்ல
முடியும் என தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..