சுவிஸ், அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கொழும்பை வந்தடைந்தனர்! Share

சுவிட்ஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்கள்.காலை 6.20 மணியளவில் அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்களும், 9 மணியளவில் சுவிட்ஸர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்களும் நாடுகடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த அனைவரும் விசேட விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுகடத்தப்பட்ட 26 பேரில் தமிழ் மற்றும் சிங்களவர்களும் இருப்பதாக விமான நிலையத்தின் குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..