நாளை ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்க உள்ள பேஸ்புக் அதிகாரிகள் Share

பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் நாளைய தினம் (15) ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை வரும் அந்த அதிகாரிகள் இலங்கையில் பேஸ்புக் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பேச உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெற உள்ளது.

இதனூடாக பேஸ்புக் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவதற்கும், தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு செயற்பாடுகளை செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..