கறுப்பான குழந்தையை வெள்ளையாக்குவதற்கு முட்டாள் தாய் செய்த செயல்!! Share

குழந்தையை வெள்ளையாக்க தாய் செய்த செயலால் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்தார்.

அந்தக் குழந்தை கறுப்பாக இருந்துள்ளது. இது அவருக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அருகில் உள்ளவர்களிடம் குழந்தையின் நிறத்தை வெள்ளையாக்க யோசனை கேட்டுள்ளார்.

பின்னர் கருங்கல்லில் வைத்து குழந்தையைத் தேய்த்துள்ளார். இதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது சகோதரி மகள், குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், குழந்தையை மீட்டனர்.

மேலும் ஆசிரியை சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தையைத் தத்தெடுத்ததால், அவரைக் கைது செய்தனர். படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..