தாய் திட்டியதால் 12 வயது பாடசாலை மாணவி துாக்கிட்டு தற்கொலை Share
தாய் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் அவளது தம்பியும் வீட்டில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சிறுமியின் தாய் மகளை கண்டித்துள்ளார். பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சிறுமி தனது தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற அந்தச் சிறுமியின் தம்பி மாலை வந்து பார்த்தபோது தனது அக்கா தூக்கில் தொங்கியதை கண்டு கூச்சலிட்டுள்ளான். சிறுவனின் கூச்சலைகேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com
