மாணவியுடன் தகாத உறவு கொண்ட கணவனை கையும் மெய்யுமாக மனைவி பிடித்தது எப்படி? Share

ரஷ்யாவில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவியுடன் தகாத உறவு வைத்திருந்த நிலையில் அவர் மனைவியிடம் வசமாக சிக்கியுள்ளார்.


ரஷ்யாவின் Chelyabinsk நகரில் அமைந்திருக்கும் South Ural மாநில பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் Dmitry(27), இவருக்கு Anna Rudenok(24) என்ற மனைவி இருக்கிறார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியரின் மனைவி Anna நேற்று தன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதில் ஒரு பெண் தன் உடை அணிந்து தனது வீட்டில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார், சோதித்து பார்த்ததில் தன் கணவரின் மாணவி என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

அதன்பின் தன் கணவரின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்த குறித்த பெண், அவரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.

ஆனால், 18 மாதங்களாக இருவரும் தகாத உறவில் இருப்பதாகவும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார் ஆசிரியர்.

சமீபத்தில் Dmitry-யின் குழந்தையை பெற்றெடுத்துள்ள Anna, பிரவசத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்த போது தான் இந்த உறவு ஏற்பட்டிருக்கும் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து நியாயம் கிடைக்கும் வரை தான் ஓய போவதில்லை என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..