இணையத்தின் ஊடாக பெண்களை மடக்கி பாலியல் லீலை புரிந்தவனுக்கு நடந்த கதி!! Share

ஜோடிகளை திருமணத்துக்காக இணைக்கும் அமெரிக்க ரியாலிட்டி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய முன்னாள் பங்கேற்பாளர் ஒருவரால் தாம் மோசமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக பெண்கள் மூவர் தெரிவித்துள்ளனர்.“Millionaire Matchmaker” நிகழ்ச்சியின் முன்னாள் பங்கேற்பாளரான மைக்கல் லெஸ்லி, 2014- 2015 வரையான காலப்பகுதியில் 3 பெண்களுக்கு போதை வழங்கி , வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

சந்தேகநபர் , டேடிங் தளங்கள் ஊடாக பெண்களை சந்தித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குற்றத்தை புரிந்துள்ளார்.

அவரது வீட்டுக்குள் உள் நுழைய மற்று வெளியேற ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுடன் கனிவாக பேசி, அவர்களை வீட்டுக்கு அழைத்து போதையூட்டி, மோசமான முறையில் துஷ்பிரயோகத்துட்படுத்தி வந்துள்ளார் அந்நபர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கருத்து தெரிவிக்கையில்;

“இணையம் மூலமாக எங்கள் தொடர்பு ஆரம்பித்தது, அவரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது, என்னை மோசமான வழியில் உறவுகொள்ள முயற்சித்தார், நான் மறுத்த போது என்னை தாக்கினார், இதன்போது வேறு பெண்களும் அங்கிருந்தனர்” , என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மீது பல பிரிவுகளின் மீது குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.

அவரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இருக்ககூடுமெனவும், எனவே அனைவரும் முறைப்பாடளிக்க முன்னவரவேண்டுமெனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..