கணவன் மாரடைப்பால் மரணம் : துயர் தாழாத மனைவி தற்கொலை!!! Share

கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணி, தேவசேனா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரமணி மாரடைப்பால் உயிரிழந்தார். கணவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தேவசேனா துக்கத்தில் இருந்துள்ளார்.

நேற்று வீட்டிலிருந்த உறவினர்கள் அனைவரும் தூங்கிய பின், தேவசேனா வீட்டிலிருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடிந்ததும் தேவசேனாவை காணாததால் உறவினர்கள்  எதேர்ச்சையாக வீட்டிலுள்ள கிணற்றில் பார்த்த போது தேவசேனாவின் உடல் கிணற்றில் மிதந்துள்ளது.

விடயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தேவசேனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர்.

கணவரின் பிரிவைத் தாங்க முடியாததால் தேவசேனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..