கோவில் ஐயர்ப் பெண்ணைக் கட்டி படுக்க விட்டு கொடூரமான செயல் செய்த மர்ம நபர்கள் (Photos) Share

வடபழனியில் கோயில் குருக்களின் கை, கால்களை கட்டிப்போட்டு அவர் கண் முன்பே மனைவியை அடித்து கொலை செய்து நகைகளை கெள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடபழனியில் கோயில் குருக்களின் கை, கால்களை கட்டிப்போட்டு அவர் கண் முன்பே மனைவியை அடித்து கொலை செய்து நகைகளை கெள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகணேஷ்(27). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஞானபிரியா(24) என்பரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பாலகணேஷ் சென்னை வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக குருக்களாக வேலை செய்து வருகிறார். வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி ஞானபிரியாவுடன் பாலகணேஷ் வசித்து வந்தார்.

திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை. கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கொடுக்கும் தட்சணையால் பாலகணேஷ் தனது குடும்பத்தை நடத்தி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பாலகணேஷ் கோயிலில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இரவு கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கழிவறைக்கு செல்ல வந்தார். அப்போது பாலகணேஷ் கை கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாணமாக கழிவறையில் கிடந்தார். இதை பார்த்த விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்து பாலகணேஷ் மனைவி ஞானபிரியாவுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு முன்பக்கம் மூடப்பட்டிருந்தது.

உடனே பதற்றத்தில் விஜயலட்சமி கதவை திறந்து பார்த்த போது படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் ஞானபிரியாவும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் காயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து விஜயலட்சுமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் ஞானபிரியாவை சோதித்து பார்த்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கழிவறையில் கிடந்த பாலகணேசை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்ைட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பாலகணேஷ் வீட்டு பீரோவில் இருந்த அனைத்து துணிகளும் கீழே சிதறிக்கிடந்தது. அதேபோல் காலி நகைப்பெட்டிகளும் கிடந்தது.

அதைதொடர்ந்து இறந்து கிடந்த ஞானபிரியாவின் உடலை பார்த்த போது அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி செயின் மாயமாகி இருந்தது. ஞானபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

மோப்பநாய் சிவன் கோவில் தெரு முனை வரை ஓடி நின்றது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இளம் தம்பதி தனியாக வசித்து வருவதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், பல நாட்களாக நோட்டமிட்டு வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியின் போது பாலகணேசுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கொள்ளையர்கள் பாலகணேசை துணியால் கை மற்றும் கால்களை கட்டி விட்டு அவரது மனைவி ஞானபிரியாவை கயிற்றால் கை மற்றும் கால்களை கட்டியுள்ளனர். அப்போது ஞானபிரியா திருடன் திருடன் என பலமாக கத்தியுள்ளார். உடனே கொள்ளையர்கள் ஞானபிரியாவை வாயை பொத்தி அவரது தலையை தரையில் கடுமையாக மோதியுள்ளனர்.

இதில் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பிறகு அவரது கழுத்தில் இருந்த நகைகளை பறித்துள்ளனர். அப்போது காதல் மனைவியை கொள்ளையர்கள் கண்முன்பே அடித்து கொலை செய்ததை பார்த்த பாலகணேஷ் வலிப்பு ஏற்பட்டு மயங்கிவிட்டார்.

உடனே கொள்ளையர்கள் பால கணேசை வீட்டில் இருந்து தூக்கி வந்து வெளியே உள்ள கழிவறையில் வீசிவிட்டு சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சவுத் சிவன் கோவில் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். அதேநேரம் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடபழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image may contain: 3 peopleImage may contain: 2 people, beardImage may contain: one or more people

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..