அடங்காத காமம்!! சுமனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கவிதா! Share

ஐதராபாத் மதனப்பேட்டை காய்கறி மார்க்கெட் அருகே டிபன் கடை நடத்தி வந்தவர் ராஜூ. இவர் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜு,

ஐதராபாத் மதனப்பேட்டை காய்கறி மார்க்கெட் அருகே டிபன் கடை நடத்தி வந்தவர் ராஜூ. இவர் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜு, காலையில் மார்க்கெட் பகுதியிலும் மாலையில் சந்தோஷ் நகரிலும் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். வாழ்க்கை சுமூகமாகப் போய்க்கொண்டிருந்தபோது குறுக்கிட்டார் சுமன். இவர், கவிதாவுக்கு தூரத்து உறவினர்.

சுமன், அடிக்கடி கவிதா வீட்டுக்கு வந்து போக, இருவருக்கும் பற்றிக்கொண்டது. இந்த நெருக்கம் ராஜூக்கு தெரிய வர, கண்டித்தார் கவிதாவை. ஆனால், கள்ளக்காதலை தொடர்ந்தார் கவிதா.

மனம் வெறுத்துப் போன ராஜூ, இதன் காரணமாக தினமும் குடித்துவிட்டு வர ஆரம்பித்தார். மனைவியிடம் நள்ளிரவு வரைச் சண்டை. பிரச்னை தொடர்ந்தது. இருந்தும் கள்ளக்காதலை கவிதாவால் கைவிட முடியவில்லை. இதனால், இருவரையும் எச்சரிக்க ஆரம்பித்தார் ராஜூ.

(சுமனுடன் கவிதா)’நம்மளை எச்சரிக்கிற ராஜூவை நாமளே தீர்த்துக்கட்டிடுவோம்’ என்று முடிவு செய்தார் கவிதா. இதற்கு சுமனும் அவர்க ளின் மற்றொரு உறவினரும் உதவ முன் வந்தனர். திட்டம் தீட்டப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல ஓவர் போதையில் தள்ளாடியபடியே வந்தார், ராஜூ. மறைந்திருந்த சுமனும், உறவினரும் வீட்டுக்குள் புகுந்து அவ ரை வளைத்துப் பிடித்தனர். கை, கால்களை கட்டிப் போட்டனர். பின்னர் கவிதா அவரது கழுத்தை ஈவிரக்கமில்லாமல் நெறித் துக் கொன்றார். உயிர் பிரிந்தது உறுதியானதும் அவர்களுக்கு மகிழ்ச்சி.

பிறகு சுமனும் அவர் உறவினரும் ராஜூவின் உடலை அவர் பைக்கிலேயே வைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்ற னர். குர்ரம்குடா கிராமத்துக்கு அருகே, காட்டுக்குள் பைக்குடன் அவர் உடலை போட்டுவிட்டு ஒன்றும் நடக்காதது போல வீட்டுக்குத் திரும்பிவிட்டனர்.மறுநாள், ‘என் கணவரை காணலீங்க’ என்று கண்ணீருடன் போலீசில் புகார் செய்தார் கவிதா. வழக்குப் பதிவு செய்த போலீ சார், சந்தேகத்தின் அடிப்படையில் கவிதாவை கண்காணிக்கத் தொடங்கினர். இதற்கிடையில் மறுநாள் ராஜூவின் உடல் கைப்பற்றப்பட்டது. கண்ணீர் விட்டு கதறி இறுதி சடங்கு செய்தார்கள் உறவினர்கள்.

போலீசாருக்கு கவிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தால், உண்மையை ஒப்புக்கொண்டார் கவிதா. பிறகு அவரது கள்ளக்காதலன் சுமன், உறவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணுகின்றனர் இப்போது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..