பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து போலீசை சரிமாரியாக அடித்த கராத்தே மாணவி..!! Share

அரியானாவை சேர்ந்த பெண் கராத்தே சாம்பியன் ஷேர் ஆட்டோவில் வரும் போது போக்குவரத்து போலீசால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை அந்த பெண் சரிமாரியாக தாக்கி போலீசிடம் ஒப்படைத்தார்.இதுகுறித்து பேசிய மாணவி, நான் கராத்தே வகுப்புக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏறினேன். அதே ஆட்டோவில் ஒரு போக்குவரத்து போலீசும் ஏறினார். அவர் என் அருகில் உட்கார்ந்தார். பின்னர் அவர் என்னுடைய மொபைல் போனை கேட்டார். என்னுடன் நட்புடன் பழக விரும்புவதாக கூறினார். நான் பேச மறுத்த போதும் அவர் தொடர்ந்து வற்புறுத்தினார்.

பின்னர் அவர் என்னை தொடத் தொடங்கினார். என்னுடைய சுயபாதுகாப்புக்காக நான் அவரை தாக்கினேன் பின்னர் ஆட்டோ டிரைவரை போலீஸ் நிலையம் கொண்டு போக கூறினேன். போலீஸ் நிலையத்தில் மூத்த பெண் போலீஸ் ஒருவர் இந்த விவகாரத்தை ஊடகங்களிடம் தெரிவிக்கவேண்டாம். தான் போலீஸ்காரரை கண்டிப்பதாக கூறினார்.

என மாணவி தெரிவித்தார்.

இது குறித்த தகவல் ரோஹ்தாக் போலீஸ் கண்காணிப்பாளரான பங்கஜ் நாயர் கவனத்திற்கு வந்த பின்னர், வழக்குப்பதிவு செய்யபட்டு போலீசார் கைது செய்யப்பட்டார்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..