முல்லைத்தீவில் கத்தியுடன் கொலை செய்யும் நோக்கில் திரிந்த நபரால் பரபரப்பு!! Share

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக இன்றைய போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று இரவு உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் கத்தியுடன் நுழைந்த நபர்
ஒருவர் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை தாக்க முற்பட்டு உள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து தப்பித்து உறவுகள் கூடாரத்தை விட்டு வெளியேறிய வேளை, அந்நபர்
அங்கிருந்த கதிரையினை கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர்.

பின்னர் அங்கிருந்த சமையல் பத்திரங்களையும் சேதப்படுத்தி உறவுகளால் ‘ இன்று 400 ஆவது
நாள் ‘ என எழுதி தொங்க விடப்பட்ட பதாகையையும் சேதப்படுத்தி உள்ளார். இந்நிலையில்
அவ்விடத்தில் மக்கள் கூடி தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற வேளை அவ்விடத்தில்
இருந்து தாக்குதலாளி தப்பி ஓட முயன்றுள்ளார்.

இருந்த போதிலும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் வீதி சோதனை நடவடிக்கையில்
ஈடுபட்டு இருந்த பொலிஸாரின் உதவியுடன் தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து
சென்ற பொலிஸார் அவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..