வவுனியாவில் விடுதி ஒன்றில் இருந்து யாழ். இளைஞனின் சடலம் மீட்பு (Photos) Share

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியொன்றில் இன்று மாலை 3.00 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியொன்றில் இன்று மாலை 3.00 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியொன்றில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய அந்தோனி நிக்சன் என்ற இளைஞனின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இவரின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..