முல்லைத்தீவில் காணாமல் போனவர்களின் உறவுகள் மீது தாக்குதல் நடத்திய நபர் இவர்தான்! Share

வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 12.04.18 அன்று 400 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வந்துள்ளார்கள்

வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 12.04.18 அன்று 400 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வந்துள்ளார்கள் இன்னிலையில் மாலை 7.30 மணியளவில் குறித்த கொட்டிலில் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மீது கத்திகொண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை கதிரை மற்றும் பாத்திரங்கள் மீது வெட்டிவிட்டு தப்பிசென்றுள்ளார்.

இன்னிலையில் வீதகாவல் நடவடிக்கையில் நின்ற பொலீஸார் குறித்த சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கமுற்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த நர் வந்த மிதிவண்டி,மற்றும் பை ஒன்று அதனுள் தொலைபேசி, கத்தி என்பனவற்றை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இன்னிலையில் 13.04.18 அன்று காலை முல்லைத்தீவு சிறிலங்கா காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் சென்று வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்கள்.

குறித்த நபரிடம் இருந்த கைபேசியினை வைத்துக்கொண்டு தொடர்புகளை ஏற்படுத்திய முல்லைத்தீவு சிறிலங்கா காவல்துறையினரிடம் குறித்த நபரின் இருப்பிடத்தை இனம் கண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு தியோநகர் கடற்கரைபகுதியில் சிறிய கொட்டில் ஒன்றில் வாசித்து வந்த நிலையில் முல்லைத்தீவு சிறிலங்கா காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.

52 அகவையுடைய மட்டக்களப்பினை சோந்த இடமாக கொண்ட க.மகேந்திரராசா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சிறிலங்கா காவல்துறை முன்னுக்கு பின்ன முரணான தகவல்களை தெரிவித்துள்ளதுடன் நான் நிறைந்த மது போதையில் இருந்துள்ளதாகவும் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் அவர்சிறிலங்கா காவல்துறையினரின் வாய்முறைப்பாட்டில் இவர் மீது ஏற்கனவே சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் இவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் காணாமல் போனவர்கள் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த நபர் முல்லைத்தீவு சிறிலங்கா காவல் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதுடன அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..