வேலைற்ற பட்டதாரிகளே இது உங்களுக்கான செய்தி! Share

வேலைற்ற பட்டதாரிகளை பயிற்சிக்காக இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்கமைய கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய விண்ணப்பித்த வேலைற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி வரை மாவட்ட மட்டத்தில் இந்த நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நேர்முகப்பரீட்சை தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் விண்ணப்பதாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வேலைற்ற பட்டதாரிகளுக்கான இந்த நேர்முகப் பரீட்சை மாவட்ட செயலகங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..