பெற்றோர் இதுதொடர்பில் கட்டாயம் அவதானம் செலுத்த வேண்டும்! Share

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் தொடர்பில் ஆயிரத்து 570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.


போலியான கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகநூல் கணக்குகளினுள் அத்துமீறி பிரவேசித்து தகவல்களை மாற்றியமைத்தமை தொடர்பிலும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இணைதளத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், முகப்புத்தக பயனாளிகள் தங்களின் இணைய பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை கணினி அவசர பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமது பிள்ளைகளின் முகப்புத்தக பயன்பாடு தொடர்பில் பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அந்த பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..