வவுனியாவில் இடம்பெற்ற சோகம்; ஒருவர் வைத்தியசாலையில் Share

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 4 இல் புத்தாண்டு தினமான நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருவருக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடே பின்னர் கத்திக்குத்துச் சம்பவத்திற்கு காரணமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிதம்பரபுரம் கற்குளம் படிவம் – 4 ஐ சேர்ந்த சிவகுமார் தியாகரட்ணம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் வவுனியா ஆசிக்குளம் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய சிங்காரம் கனகரத்தினம் என்பவரை கைது செய்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..