குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன் Share

வேலூர் மாவட்டத்தில் குடிக்க பணம் தர மறுத்த தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது.திருப்பத்தூர் சிவராஜ் பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் ஆய்வாளாரான மனோகரன். இவரது மகன் ராஜ்குமார். ராஜ்குமார் குடிக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார் அதனை தந்தை மனோகரன் தர மறுத்துள்ளார்.

இந்நிலையில் திருமணமான ராஜ்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் மற்றவர்களின் தயவில் வாழ்ந்து வந்திருக்கிறார்.

குடிப்பதற்கும் தந்தையின் தயவை எதிர்பார்த்த ராஜ்குமார் சில நாட்களாக வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதும்படி கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.

மகனின் குடிப்பழக்கத்தால் வீட்டை எழுதிக் கொடுப்பதை தள்ளிப் போட்டு வந்திருக்கிறார் மனோகரன் .

இரண்டு வருடமாக இந்த சண்டை தொடர்ந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று குடிக்கப் பணம் கேட்டிருக்கிறார் ராஜ்குமார் , மனோகரன் மறுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆத்திரத்தில் அப்பா என்றும் பாராமல் மகன் அவரைத் தாக்கியிருக்கிறார் . மீண்டும் வெறியோடு கீழே விழுந்த மனோகரனை அங்கிருந்த இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து சரமாரியாக ராஜ்குமார் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ராஜ்குமாரை கைது செய்த பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..