ஜாக்கிசானின் 18 வயது மகள் ஓரினச்சேர்க்கையாளராக மாறியதால் வீதிக்கு வந்த கேவலம்!! Share

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மற்றும் ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ ஆகியோருக்கு பிறந்த மகள் எட்டா சோக் லாம் என்பவர்.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மற்றும் ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ ஆகியோருக்கு பிறந்த மகள் எட்டா சோக் லாம் என்பவர்.

தற்போது பதினெட்டு வயதான இவர் நான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என பகிரங்கமாக அறிவித்தார். தனது தோழி ஆன்டி ஆன்டுடன் ஜோடியாக இருக்கும் படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தாயுடன் வசித்து வந்த எட்டா சோக் லாமை காணவில்லை என்று அவருடைய தாய் எலைன் போலீசில் புகார் செய்தார்.

இந்த பரபரப்புகளுக்கு இடையில் எட்டா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது,

நானும் என் தோழி ஆன்டி ஆன்டும் செலவுக்கு பணம் இல்லாமல், இருக்க இடம் இல்லாமல் ஹாங்காங்கில் கஷ்டப்படுகிறோம். வீடு இல்லாமல் தெரு ஓரத்தில், பாலத்தின் அடியில் எல்லாம் தூங்க வேண்டியது இருக்கிறது. தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுத்து உதவி செய்யுங்கள்.

எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு. பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் உதவி கேட்டோம். யாரும் உதவ முன்வரவில்லை. என் தந்தை 395 மில்லியன் டாலர்களுக்கு சொந்தகாரர் அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுங்கள். என உருக்கமாக கோரியுள்ளார்.

நடிகர் ஜாக்கிசான் அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்தமையால் பிறந்த குழந்தையே எட்டா சோக் லாம் என ஜாக்கிசான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.     

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..