காதலித்த பெண்ணை மயக்கமருந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த காவாலி இவன்!! ! (Video) Share

காதலிப்பதாக கூறி தருமபுரியை சேர்ந்த இளம் பெண்ணை சேலத்திற்கு அழைத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதலிப்பதாக கூறி தருமபுரியை சேர்ந்த இளம் பெண்ணை சேலத்திற்கு அழைத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த மாலிக்(nayeem malik) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் பெண் மாலிக்கை வலியுறுத்தி வந்துளளார். இதனால்,  கடந்த 29ஆம் தேதி இளம்பெண்ணை தொடர்பு கொண்ட மாலிக், திருமணம் செய்து கொள்வதாகவும் உடனடியாக சேலம் வருமாறும் கூறியுள்ளான். இதையடுத்து சேலம் வந்த இளம்பெண்ணை மாலிக்சேலம் சத்திரம் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் குளிர்பானத்தில் இளம் பெண்ணுக்கு மதுவைக் கலந்து கொடுத்த மாலிக், தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அத்துடன் தனது நண்பர்களான நபீஸ்( nafees ) மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் மாலிக் விடுதிக்கு வரவழைத்துள்ளான். பின்னர் மூவரும் கூட்டாக சேர்ந்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி இளம்பெண்ணின் ATM கார்டை எடுத்துச் சென்று 30ஆயிரம் பணத்தையும் அவர்கள் எடுத்துள்ளனர். மேலும் மீண்டும் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்று மிரட்டி இளம் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர்.

காதலன் மாலிக் செயலால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மாலிக், நபீஸ் மற்றும் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..