கணவருக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் Share

இணையதளத்தில் பதிவு செய்து, காதல் வளர்த்த கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் பெங்களுரு இளைஞரை இரண்டாவது திருமணம் செய்ய ரெடியானதும், உறவினர்கள் கேள்விகளால் சிலம் பெண் சிக்கியது அம்பலமானது.

இணையதளத்தில் பதிவு செய்து, காதல் வளர்த்த கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் பெங்களுரு இளைஞரை இரண்டாவது திருமணம் செய்ய ரெடியானதும், உறவினர்கள் கேள்விகளால் சிலம் பெண் சிக்கியது அம்பலமானது.

பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வரன் தேடி இணையதளம் மூலமாக வலைதளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அதே வலைதளத்தில் கோவை கணபதி, மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பதிவு செய்திருந்தார். இளம்பெண்ணின் படத்தை பார்த்ததும் வாலிபருக்கு பிடித்திருந்தது.

இதையடுத்து, அந்த பெண்ணின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். பலமுறை பேசியதில் இளம்பெண் அந்த பெங்களுரு வாலிபரை கவர்ந்துவிட்டார். அதனால், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனையடுத்து, அந்த பெண் தனது பெற்றோர் உடல்நலம் சரியில்லை, அவர்களால் வரமுடியாது ஆகவே

நிச்சயதார்த்தத்தை எளிமையாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த வாலிபர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு கோவையில் ஒரு ஹோட்டலில் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத்தை எளிமையாக நடத்தினார்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக பெங்களூரில் இருந்து ஹோட்டலுக்கு வாலிபரின் உறவினர்கள் வந்தனர்.

அப்போது, மணப்பெண்ணான அந்த இளம்பெணின் குடும்பத்தார் நீண்ட நேரமாகியும் யாரும் வரவில்லை. பின்னர் வெகுநேரத்திற்கு பின்னர் மணப்பெண் மட்டும் தனியாக வந்தார். அங்கு வந்த அந்த பெண் பெற்றோருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருப்பதால் அவர்கள் யாரும் வரவில்லை என்றும், நாம் திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் சென்று ஆசி பெறலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த வாலிபரின் குடும்பத்தினர் இளம்பெண்ணிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். அவர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை இருப்பதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருக்கு தெரியாமல் வேறு திருமணம் செய்ய முயன்றதும் அம்பலமானது. இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் ஸ்டேஷனுக்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..