திருமணமான 10 நாளில் மனைவியை கொன்றது ஏன்? புதுமாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம் Share

இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் மனைவியை கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவிகாந்த் கிரி. இவருக்கும் பிங்கி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று பொலிசாருக்கு போன் செய்த கிரி தனது வீட்டுக்கு பைக்கில் வந்த கொள்ளையர்கள் பிங்கியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த போது பிங்கி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

ஆனால் கிரிக்கு எந்த வித காயமும் ஏற்படாத நிலையில் சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

இதில் பிங்கியை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார்.

கிரி அளித்துள்ள வாக்குமூலத்தில், 20 லட்சம் கொடுத்து பிங்கி வீட்டார் எங்களுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.

ஆனால் நான் மேலும் 15 லட்சம் வரதட்சணை வேண்டும் என பிங்கியிடம் கேட்டதற்கு அவர் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டார்.

இதில் ஆத்திரமடைந்த நான் அவரை சுட்டு கொன்று விட்டு பொலிசிடம் தப்பிக்க கொள்ளையர்கள் கொன்றதாக கூறினேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கிரியை பொலிசார் கைது செய்துள்ளனர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..