அம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே! சகோதரனை பார்த்து கதறி அழுத சகோதரி Share

அம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே! சகோதரனை பார்த்து கதறி அழுத சகோதரி
அம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே! சகோதரனை பார்த்து கதறி அழுத சகோதரி

ஜம்மு காஷ்மீரில் கல் வீசி தாக்கப்பட்டு இறந்த சகோதரனைப் பார்த்து சகோதரி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை உருக வைத்துள்ளது.

சென்னை ஆவடி டாங்க் தொழிற்சாலையில் பணிபுரியும் ராஜவேல்- செல்வி தம்பதியினருக்கு ரவிக்குமார், திருமணி செல்வன் என்ற இரு மகன்களும் சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ரவிகுமாரைத் தவிர அவர்கள் குடும்பத்தினர் கடந்த 4-ஆம் திகதி டெல்லி வழியாக காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது கடந்த 7-ஆம் திகதி காலை காஷ்மீரில் புல்காம் மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பகுதியை சுற்றி பார்க்க ராஜவேல் குடும்பத்தினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கலவரக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

அவர்கள் ராஜவேல் குடும்பத்தினர் சென்ற வாகனத்தை நோக்கியும் கற்களை வீசியதால் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த திருமணி செல்வனின் நெற்றி, தலையை கற்கள் தாக்கின.

இதனால், கோமா நிலைக்கு சென்ற, திருமணிச்செல்வன் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.

அந்த சம்பவத்தின் போது தந்தை ராஜவேல், மகனை பார்த்து கத்தியுள்ளார். திருமணிசெல்வன் காதில் ஹெட் போன் போட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததால், தந்தையின் எச்சரிக்கையை கவனிக்கத் தவறிவிட்டார்.

தந்தை கத்தியதை கேட்ட மகள் சங்கீதா தலை குனிந்ததோடு, தாயார் செல்வியின் தலையை பிடித்து இழுத்ததால் இருவரும் உயிர் தப்பினர்.

சகோதரரின் உடலை பார்த்து, அம்மாவைபோல உன் தலையையும் நான் இழுத்திருக்கக் கூடாதா என்று சென்னைக்கு வந்த அவரது உடல் கொண்டுவரப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..