பிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு!! சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்!! Share

வடபகுதியில் வேலைவாய்பில்லாத யுவதிகள், பெண்களுக்கு இலங்கையில் முதல்தர ஏற்றுமதி நிறுவனமாக உள்ள கொழும்பில் அமைத்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலை (Brandix) உடனடி வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளது.

வடபகுதியில் வேலைவாய்பில்லாத யுவதிகள், பெண்களுக்கு  இலங்கையில் முதல்தர ஏற்றுமதி நிறுவனமாக உள்ள கொழும்பில் அமைத்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலை (Brandix)  உடனடி வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளது. குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்கு சேரும் வடபகுதி யுவதிகள் மற்றும் பெண்களுக்கு தங்குமிட வசதியுடன் இந்த வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
Image may contain: one or more people, crowd and outdoor
இலவச தங்குமிட வசதியுடன் காலை உணவு இலவசமாகவும் மிகக் குறைந்த செலவுடன் மதிய உணவும் வழங்குவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மதிய உணவும் மற்றும் இரவு உணவு ஆகியவற்றுக்கு நாள் ஒன்றுக்கு 60 ரூபாவே அறவிடப்படும்.

 இவ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்ற விரும்பும் யுவதிகள், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பத்தலைவிகள் மற்றும் விதவைகள் ஆகியோர் சிறப்பான தரத்துடன் பெண்களால் நிர்வகிக்கப்படும் விடுதிகளில் பாதுகாப்புடன் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் குறித்த நிறுவனம் வழங்குகின்றது.

இந் நிறுவனத்தில் பணியாற்ற விரும்புபவர்கள் தங்கள் குடும்பங்களுடன் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் தங்கும் இடம் போன்றவற்றை பார்வையிட்டு திருப்தி ஏற்படும் பட்சத்தில் வேலையில் சேருவதற்கும் நிறுவனம் வசதிகளைச் செய்துள்ளது.


Image may contain: outdoor


எந்தவித பயிற்சிகளும் இல்லாதவர்களை 3 மாத கால பயிற்சியும் நிறுவனம் வழங்கி அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கவுள்ளது. பயிற்சியின் போதும் அவர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றுடன் 22 ஆயிரம் ரூபா சம்பளமும் வழங்கும். கணவளை இழந்து குழந்தைகளுடன் வசிக்கும் பெண்களும் குறித்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெறலாம். அந்தப் பெண்களின் குழந்தைகளுக்கு கொழும்பிலேயே பாடசாலையில் சேர்த்து கல்வி வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நிறுவனம் முன்வந்துள்ளது.

முழுமையாக குளிரூட்டப்பட்ட குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 8 மணி நேர வேலையுடன் மேலதிக நேரம் வேலை செய்தால் அதற்காக ஒவ்வொரு மணித்தியாலத்திற்கான கொடுப்பனவுகளும் ( ஓவரைம்) குறித்த நிறுவனம் வழங்கும். பயிற்சியின் பின் மாதம் ஒன்றுக்கு 35ஆயிம் ரூபா பெறுவதுடன் தங்குமிடவசதி , சாப்பாடு என்பன இலவசமானதால் அவ்வளவு பணத்தையும் சேமிக்கவும் வசதியுள்ளது.


கல்வித் தகுதி மற்றும் ஆடைத்தொழிற்சாலை அனுபவம் (தையல் அனுபவம்)  ஏதும் இல்லாதவர்களையும் உடனடியாக தங்கள் ஊழியர்களாக குறித்த நிறுவனம் இணைத்து செயற்படவுள்ளது.
Image may contain: 3 people, people smiling, people sitting


யாழ்ப்பாணம் உட்பட்ட பிரதேசங்களில் மிகக் குறைந்த ஊதியத்துடன் நிறுவனங்களில் வேலை பார்க்கும் யுவதிகள் மற்றும் பெண்களுக்கு இது அரிய வாய்ப்பாகும்.

கொழும்பில் வேலை என பின் நிற்காது உங்களது உறவுகளுடன் கலந்தாலோசித்து குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டை நேரில் சென்று அறிந்து கொண்டு அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது குறித்த நிறுவனத்தின் பணியாளராக இணைந்து கொள்ளுங்கள்.

வாழ்வாதார உதவிகள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்கள் தரும் சொற்ப சலுகைகளை பெறுவதற்கும் நுண்கடன்களைப் பெற்று தற்கொலை செய்து கொள்வதற்கும் முயற்சிகளை மேற் கொள்ளாது உங்களது சொந்தக் காலில் நின்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முயற்சியுங்கள்...


Image may contain: 2 people, people smiling, outdoor


இந்த நிறுவனத்தில் நீங்கள் சேருவதால் உங்களுக்கு கிடைக்கும் ஏனைய நண்மைகள் மற்றும் வசதிகள்

வருடத்துக்கு இரு முறை போனஸ்

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் அவசர சிகிச்சைகளுக்கு ஆகக் கூடிய தொகையாக 3 லட்சம்

மரணக் கொடுப்பனவு
திருமணம் செய்யும் போது கொடுப்பனவு
மற்றும் காப்புறுதி வசதிகள் உட்பட எண்ணற்ற சலுகைகள் இந் நிறுவனம் உங்களுக்கு வழங்கும்.

தயவு செய்து இந்தத் தகவலை உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் வேலையற்ற பெண்கள் மற்றும் யுவதிகள் போன்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்வாதாரத்துக்காக காத்திருக்கும் பெண்களுக்கும் இந்தத் தகவலை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

 No automatic alt text available.
குறித்த நிறுவனத்தில் ஊழியராக சேருவதற்கு முன்வருவோர் 0771328910 எனும்  தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் tamilyouthjob@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Image may contain: 3 people, people sitting and phone

Image may contain: 5 people, people smiling, people standing

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..