திருகோணமலையில் பல திருமணம் புரிந்த மன்மதனுக்கு நடந்த கதி Share

கிண்ணியா பகுதியில் ஏழரை பவுண் நகையையும், ஒரு இலட்சம் ரூபா பணத்தினையும் மோசடி செய்த நபரை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா, நடுஊற்று பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரண்டு திருமணம் முடித்து பிள்ளைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக பெண்ணொருவரிடம் சீதனமாக ஏழரை பவுண் தங்க நகையையும், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினையும் பெற்று திருமணம் முடித்துள்ளார்.

இந்த நிலையில் பெண் வீட்டாருக்கு குறித்த சந்தேகநபர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடித்துள்ளதாக தெரியவரவே கிண்ணியா பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் கடந்த சனிக்கிழமை சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..