யாழ்ப்பாணப் பொலிஸ் அப்புவுக்கு எதிராக நடவடிக்கை ஆரம்பம்!! Share

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்பைப் பேணிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்பைப் பேணிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஷான் பெர்னாண்டோ பணித்துள்ளார்.

அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தரின் சட்டவிரோத செயற்பாடுகளை கவனிக்காது, அவருக்கு துணை நின்ற யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமையக் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பில் வடபிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலம் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில்தான் போதைப்பொருள்களின் விற்பனை அதிகளவில் இடம்பெறுகின்றன. அவற்றுக்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் என பலமட்டங்களிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.

பொலிஸார் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படுகின்றன. பொலிஸ் உத்தியோகத்தர் யாராவது குற்றஞ்செய்திருப்பின் தண்டிக்கப்படுவர்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அப்பு, ஆவா குழுவின் வினோத் உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்தார். கொள்ளைக் கும்பல்கள் – போதைப் பொருள் விற்பனையாளர்களுடனும் அவருக்கு தொடர்பிருந்துள்ளது.

அவருக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்த மன்னாருக்கு இடமாற்றப்பட்டுள்ளார். உள்ளக விசாரணைகள் நிறைவடைந்ததும் பொலிஸ் உத்தியோகத்தர் அப்புக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்புவின் நடவடிக்கைகளை கண்காணிக்காது அவருக்கு துணை நின்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு அடுத்தபடியாக கிளிநொச்சி பொலிஸ் பிரிவில்தான் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகம் – என்றன.</p

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..