அரச ஊடகங்களின் புதிய தலைவர்கள் நியமனம் Share

அரச ஊடகங்களின் புதிய தலைவர்கள் நியமனம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் அரச ஊடக நிறுவனங்களின் புதிய தலைவர்கள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இனேகா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவராக திலகா ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சித்தீக் மொஹமட் பாறூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செலசினி நிறுவனத்தின் புதிய தலைவராக உமா ராஜமந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..