கண்டி இனவன்முறை: மகிந்த அணி எம்.பியை விசாரணைக்கு அழைப்பு Share

கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகமவுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

கண்டி நிர்வாக மாவட்டத்தில் திகன உள்ளிட்ட பகுதியில் கடந்த மார்ச் மாத முற்பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

அதுதொடர்பான விசாரணைகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வன்முறைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இராணுவத்தினர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகமவை, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்புக் கட்டளை அனுப்பியுள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..